பாலக்காடு சாம்பார்
தேவையான பொருட்கள்:
உருளை,சின்ன வெங்காயம், தக்காளி, வழுதலங்காய் (வயலட் நிற நீட்ட கத்திரிக்காய்) முருங்கைகாய், காரட், பீன்ஸ் - 1/4 கிலோ கிராம்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவைகேற்ப
தாளிக்க:
எண்னெய் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4 இலைகள்
சாம்பார் பொடி:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பானில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் சாம்பார் பொடிக்கு
தேவையானவையை போட்டு நல்ல வறுத்து ஆறிய பிறகு பேஸ்டாக அரைக்கவும்.
துவரம் பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும், நன்றாக வதங்கிய பிறகு காய்களை போட்டு வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஊற வைத்த புளியை நல்ல வடிகட்டி அந்த தண்ணீரை இந்த வெந்த காயோடு விட்டுமேலும் பத்து நிமிடம் வேக வைக்கவும்.
கடைசியில் அரைத்துள்ள சாம்பார் மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
ஒரு சின்ன பானில் எண்னெய் விட்டு அதில் தாளிக்க உள்ளதை தாளித்து போடவும்.
மேலே கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், தோசை, இட்லி, உப்புமா இவையோட சாப்பிட நன்றாக இருக்கும்.