பாசிப்பருப்பு சொதி
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/4 கப்
முதல் தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
அரைக்க:
பச்சை மிளகாய் - 4
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவையுங்கள்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
வெந்த பாசிப்பருப்புடன் இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி வேகவையுங்கள்.
வெங்காயம் நன்கு வெந்தததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து தாளித்து கொட்டி இறக்கி, எலுமிச்சம்பழம்ச் சாறு, கறிவேப்பிலை சேருங்கள்.
குறிப்புகள்:
இட்லி, இடியாப்பம், சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம்.