பாசிப்பயறு சாம்பார்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 2
கீறிய பச்சைமிளகாய் - 2
புளிக்கரைச்சல் - 3 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பயறை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவக்கவும். பின் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
பின் வேகவைத்த பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைச்சல், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்க்கவும்.
சாம்பார் கெட்டியான பின் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்