பருப்பு சாம்பார்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த துவரம் பருப்பு - 2 கோப்பை
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கொஞ்சம்
தாளிக்க எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
பருப்புடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு, பெருங்காயத்தூள், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் வேக வைத்து வைத்துள்ள பருப்பை இக்கலவையுடன் சேர்க்கவும்.
பருப்பு கலவையை நன்றாக கலந்து விடவும்.
சாம்பாரை நன்றாக கொதிக்க விடவும். (ஒரு கொதி வந்தால் போதும்.)
வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்துடன் சாப்பிட ஈசியாக செய்ய கூடிய பருப்பு சாம்பார் ரெடி.