பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
கோடா மசாலா - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சம்பழ அளவு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு பருப்பை வேக வைக்கவும்.
ஒரு டம்ளர் நீரில் புளியைக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு முதலில் பெருங்காயப் பொடியை பொரித்துக் கொண்டு சீரகம், கடுகு போடவும்.
அவை வெடித்ததும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா பொடி ஆகியவற்றைப் போட்டு கறிவேப்பிலையையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வேக வைத்து எடுத்த பருப்பை இதனுடன் சேர்த்து புளித்தண்ணீர், வெல்லம், உப்பு, போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.