பருப்பு கலவை சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 10
முருங்கைக்காய் - 5
கத்திரிக்காய் - 100 கிராம்
கொத்தவரங்காய் - 10
உருளை கிழங்கு - 2
காரட் - 1
தக்காளி - 2
மாங்காய் - 1
பூசணிக்காய் - ஒரு மெல்லிய கீற்று
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொண்டு மூன்று பருப்பையும் ஒன்றாய் போட்டு வேக வைக்கவும்.
பாதி வெந்ததும் மாங்காய், தக்காளி தவிர மற்ற காய்கறிகளை அதில் வெட்டிப் போட்டு வேக வைக்கவும்.
பருப்புகளும் காய்களும் வெந்ததும் மாங்காயையும் தக்காளியையும் வெட்டிப் போட்டு உப்பு போடவும்.
மாங்காய் வெந்ததும் ருசிபார்த்துத் தேவையானால் சிறிது புளியைக் கரைத்து ஊற்றவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலையையும் போட்டு வெடித்ததும் சாம்பாரில் கொட்டி இறக்கி பரிமாறவும்.