பச்சை சாம்பார்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 லிட்டர்

பச்சை மிளகாய் - 10

புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 3

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து வடிக்கட்டிக் அரை லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, அரைத்தேக்கரண்டி வெந்தயம், கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை வாய் கீறி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

புளித்தண்ணீரில் வதக்கிய மிளகாய் மற்றும் காய்கறிகளைப் போடவும்.

உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்து, புளித்தண்ணீர் சிறிது வற்றியதும் பருப்பைப் போட்டுக் கலந்து மேலும் 5 நிமிடம் கொதித்தபின் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: