நூக்கல் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நூக்கல் (தோலை நீக்கி நறுக்கி வைக்கவும்) - 1

வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு,உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி (நீரில் கரைத்தது) - 1 கோலியளவு

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

பின் வெங்காயத்தைபோட்டு ஒரு வதக்கு வதக்கி பெருங்காயப்பொடி, வெந்தயப் பொடி போட்டு ஒரு வதக்கு வதக்கி தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கி நூக்கலை போடவும்.

4 நிமிடம் நன்கு வதக்கி சாம்பார் பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதுக்க விடவும்.

நன்கு கொதித்ததும் துவரம் பருப்பு, புளி தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.

கொதித்து குழம்பு வற்றும் வரை சிம்மில் வைத்து பின் பரிமாறவும்.

குறிப்புகள்: