நீட்டு சாம்பார்
0
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1 டம்ளர்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தாளிக்க: கடுகு, எண்ணெய், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை குழைய வேக வைத்து எடுத்து வைக்கவும். அதில் உப்பு, பெருங்காயத்தை சேர்த்து வைக்கவும்..
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெடித்ததும் கருவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்..
பின் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் இக்கலவையில் பருப்பை ஊற்றி இரண்டு தம்ளர் தண்ணீர்சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.