தேங்காய்ச் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்

தேங்காய் - 1

சின்ன வெங்காயம் - 10

புளி - சிறு எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

மல்லிவிதை - 3 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பினை நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயின் அரை மூடியைத் துருவி எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயை மிகச் சிறியத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தினை உரித்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு போட்டு தேங்காய்த் துண்டுகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

தேங்காய்த் துருவல், சீரகம், மிளகு, பச்சை மிளகாய், மல்லிவிதை ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசலுடன் அரைத்த மசாலாவினைக் கலந்து கொள்ளவும்.

ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

பிறகு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதன்பின் புளிக்கரைசலை ஊற்றவும்.

தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன்பு வேக வைத்துள்ள பருப்பினைச் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: