துவரம் பருப்பு கடைசல்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கிலோ
பச்சை நிலக்கடலை - 1 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் - அரை மூடி துருவல்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவையானது
செய்முறை:
சூடான தண்ணீரில் புளியை போட்டு, ஐந்து நிமிடத்திற்குப் பின்னர் நன்றாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பருப்பு, நிலக்கடலை இரண்டையும் ஒன்றாய் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். வெந்த பிறகு உப்பு, மிளகாய் பொடியை போடவும்.
தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுது, புளித் தண்ணீர் இரண்டையும் வேகும் பருப்புடன் சேர்க்கவும்.
சுமார் 10 நிமிடங்கள் கொதித்து எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் இறக்கி, கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு பரிமாறவும்.