திடீர் இட்லி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கை

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 5

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தனியா - 3 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

வெல்லம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.

புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.

பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.

அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேsர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மீதியுள்ள நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் (முழுதாக), நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, வெல்லம் சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: