தாள்சா
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைக்க:
கடலை பருப்பு - 1/2 ஆழாக்கு
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
காய் வேக வைக்க:
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 3
கருணைக்கிழங்கு - ஒரு துண்டு
வாழைக்காய் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 3 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - நான்கு பல்
கறிவேப்பிலை - ஒரு பெரிய கொத்து
கொத்தமல்லி தழை - கொஞ்சம் மேலே தூவ
செய்முறை:
காயில் சேர்க்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
இரண்டு பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கரண்டியால் மசித்து புளிவாசம் அடங்கியது ஊற்றவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கொட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.