தாளித்த இறைச்சி சாம்பார் (தாளிச்சா)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்.
கடலைப்பருப்பு - 50 கிராம்.
இறைச்சி எலும்புடன் - 1/4 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
நீளமாக 4 துண்டுகளாக அரிந்த கத்தரிக்காய் - 1
சற்று பெரிய துண்டுகளாக வெட்டிய வாழைக்காய் - 1
மாங்காய் - 1 அல்லது எலுமிச்சை அளவு புளிக்கரைசல்.
உருளைக்கிழங்கு - ஒன்று (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கொத்தமல்லித் தழை - சிறிது
பட்டை - ஒரு துண்டு.
தயிர் - 2 மேசைக்கரண்டி.
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ப்ரஷர் குக்கரில் இறைச்சி, மஞ்சள் தூள், பருப்புக்களுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன் அதை தனியே வைத்துவிட்டு, மறுபடியும் ப்ரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பட்டை போட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை கிளறி, மிளகாய்தூள், தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் தனியாத் தூள், தயிர், நறுக்கிய காய்கள், வேகவைத்த இறைச்சி, பருப்பு கலவை, உப்பு, கறிவேப்பிலை இவைகளுடன் தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், கொத்தமல்லி தழை சேர்த்து, சூடாக பரிமாறவும்.