தால் தர்க்கா (பாகிஸ்தான்)
தேவையான பொருட்கள்:
மூங்தால் - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
டால்டா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சபருப்பை லேசாக வறுத்து ஊறவைக்கவும்.
குக்கரில் டால்டா, எண்ணெயை காய வைத்து அதில் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போனதும் கொத்தமல்லி பாதியை போட்டு வதக்கி தக்காளி, பச்சைமிளகாய் ஒடித்து போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஊறவைத்த பருப்பையும் போட்டு வதக்கி கொஞ்சமாக கால் கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் போதும்.
ஆவி அடங்கியதும் மீதி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.