தர்பூசணி சாம்பார்
தேவையான பொருட்கள்:
தர்பூசணி (தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் இடையில் இருக்கும் பச்சை மற்றும் வெள்ளை பகுதி மட்டும்) - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
தர்பூசணியின் சிவப்பு நிறப்பகுதியை எடுத்து விட்டு மீதம் உள்ள வெள்ளை பச்சை பகுதியை மட்டும் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை கழுவி, அதனுடன் பூண்டு, சீரகம், தர்பூசணி துண்டுகள், மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிக் கொளவும்.
தக்காளி வதங்கியவுடன் சாம்பார் பொடியை போட்டு கிளறிவிட்டு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். குழம்பு கொதித்தவுடன் கறிவேப்பிலையை தூவி இறக்கி பரிமாறவும்.