தடியங்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
பருப்பு - 100 கிராம்
தடியங்காய் - 200 கிராம்
தக்காளி - 1 பெரியது
வெங்காயம் - பாதி
மிளகாய் - 2
சாம்பார் பொடி - 1 அல்லது 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1/4 தேக்கரண்டி
பெருங்காய பொடி - பின்ச்
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
வற்றல் - 2
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
செய்முறை:
முதலில் பருப்பை சிறிது ஊறவைத்து மஞ்சள் பொடி, சீரகப்பொடி, பூண்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்த பின்பு பருப்பை எடுத்து விட்டு அதே குக்கரில் தடியங்காய். கட் செய்த தக்காளி, வெங்காயம், சாம்பார் பொடி, மிளகாய், உப்பு போட்டு ஒரு விசில் வைக்கவும்.
பின்பு காய் வெந்தபின்பு வேகவைத்த பருப்பை போட்டு கொதிவரவும் மல்லி இலை போடவும்.
பின்பு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, வற்றல், வெங்காயம், காயப்பொடி கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
ப்ளைன் சாதத்துடன், ஃப்ரை அயிட்டம் சைட் டிஷ் வைத்து பரிமாறவும்.