தக்காளி பருப்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறுபருப்பு - 1/4 கப்

தக்காளி - 4

பச்சைமிளகாய் - 1

மஞ்சள்தூள் - சிறிது

மசாலாதூள் - சிறிது

கருவேப்பிலை - சிறிது

வெங்காயம் (பெரியது) - பாதி

தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - தாளிப்புக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிறுபருப்பை வறுத்துக்கொள்ளவும்

தக்காளி, வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும். (சிறிது தாளிப்புக்கு வெங்காயத்தை எடுத்து வைக்கவும்.)

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளித்து பின் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, சிறு பருப்பு, மஞ்சள் தூள், மசாலா தூள், கீறிய பச்சை மிளகாய் போட்டு கிளறி, தேங்காய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

தீயை குறைத்துவைத்து வேகவிடவும். நன்கு பருப்பு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: