தக்காளி பருப்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

துவரம் பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - பாதி

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இலை

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை நான்கு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கிவிட்டு தீயை குறைத்து மூடிபோட்டு நன்கு வேக வைக்கவும்.

தக்காளி நன்கு குழைந்தது போல ஆனதும், வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து கிளறி ஒரு ஐந்து நிமிடம் வைத்து இறக்கி விடவும்.

குறிப்புகள்: