தக்காளி பருப்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள், பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் நெய், எண்ணெய்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
துவரம் பருப்புடன் பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நீர் சேர்க்காமல் ஒரு விசில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும், வேக வைத்தவற்றோடு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
நெய்யுடன் சுடு சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
மோர் மிளகாய், உருளைக் கறி, முட்டை வறுவல் இதற்கு சரியான ஜோடி.