தக்காளி சாம்பார் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/2 கப்

பூண்டு - 15 பல்

மஞ்சள் துள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

உளுந்து - 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 6

துருவிய தேங்காய் - 1/4 கப்

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 5

சோம்பு - 1 தேக்கரண்டி

தனியா (கொத்தமல்லி) - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 4

செய்முறை:

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் தக்காளியை நறுக்கிப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதே எண்ணெயில் மற்றபொருட்களையும் வறுத்து எடுத்து தக்காளியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வேறு ஒரு வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெய்யை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.

அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டுப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அரைத்து வைத்த விழுதினையும் தண்ணீர் சேர்த்து குழம்பு பதத்திற்கு வைக்கவும்.

அதனுடன் மஞ்சள் துள்,உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்த பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: