தக்காளி சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 2
பூண்டு - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பருப்பை வேக வைத்து நீரோடு வைக்கவும்.
பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கினால் போதுமானது. இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சாதம், தோசை, இட்லி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.