சுலப முறை தோசை சாம்பார்
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
காரட் - 1
நடுத்தர சைஸ் கத்தரிக்காய் - 1
பெரிய உருளைக் கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணை - 2 மேசைக்கரண்டி
கடுகு & உளுந்து - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
காரட், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை சிறிய சிறிய மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
முதலில் பாசிப் பருப்பை கழுவி ஐநூறு மி.லி தண்ணிர் விட்டு மஞ்சள் பொடி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காரட், கத்தரிக்காயை, உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றைப் போட்டு குக்கரில் வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அனைத்து இறக்கி வைத்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.