சிவப்புக்கீரை மாங்காய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய சிவப்புக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

வேக வைத்த துவரம் பருப்பு - 1/2 கப்

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1

நீளமாக கீறிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

நேராக நறுக்கிய மாங்காய் - 1

தாளிக்க:

எண்ணைய் - 8 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு பின் பெருங்காயம், வெந்தயப் பொடி, வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் சுத்தம் செய்த கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் சாம்பார் பொடி சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும்.

ஒரு கொதி வந்ததும் துவரம் பருப்பை சேர்க்கவும்.

பின் உப்பு போட்டு நறுக்கிய மாங்காயை போட்டு மாங்காய் வெந்ததும் அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.

குறிப்புகள்: