சின்ன வெங்காய சாம்பார் (1)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் -250 கிராம்
புளி - எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 3/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
துவரம்பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பு, வேக வைத்த பருப்பை சேர்த்து, மேலும் கொதிக்க விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.