சின்ன வெங்காய சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

மைசூர் பருப்பு - 1 கப்

வெல்லம் - ஒரு தேக்கரண்டி

தனியா - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

வெந்தயம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து ஊற வைத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மசாலாப் பொருட்களையும், தேங்காய் துருவலையும் தனித்தனியாக வறுத்தெடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும். மைசூர் பருப்புடன் தேவையான அளவு நீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்தெடுத்து மசித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் தோலுரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த மைசூர் பருப்பைக் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு, புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.

அதனுடன் தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து கிளறவும்.

நன்றாக கொதி வந்தவுடன் கறிவேப்பிலையை கசக்கித் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: