சாம்பார் மற்றும் வாழைக்காய் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - ஒரு கட்டு

துவரம் பருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

புளி கரைசல் - சின்ன கரண்டி அளவு

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 2 துண்டு

சோம்பு - 3 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 3 தேக்கரண்டி

வாழைக்காய் ப்ரை:

வாழைக்காய் - 1

கடலைமாவு - 2 தேக்கரண்டி

கார்ன்ப்ளார் மாவு - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் கீரை, வெங்காயம், மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் அரைத்த மசாலா விழுது, உப்பு, புளி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.

பின்,கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை ஊற்றவும்

பின் கடாயில் தாளிக்க கொடுத்தவைகளைப் போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றவும் மல்லி இலை தூவி இறக்கவும். முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.

வாழைக்காய் ப்ரை:

வாழைக்காயை தோல் எடுத்து இரண்டு அங்குலம் அளவு நறுக்கி கொள்ளவும்

பாத்திரத்தில் வாழைக்காய், உப்பு, மிளகாய்தூள், கார்ன் ப்ளார், கடலைமாவு, பெருங்காயதூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு துண்டாகபோட்டு பொரித்து எடுக்கவும்

குறிப்புகள்:

பெருங்காயத்தூளுக்குப் பதிலாக சிக்கன் 65 மசாலா சேர்த்துக் கொள்ளலாம்