கோவக்காய் மாங்காய் பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - 500 கிராம்

மாங்காய் - 1

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 6

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - சிரிது

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

கோவக்காய், மாங்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய காய்கறிகளை சிறிது தண்ணீருடன் வேக வைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன், பருப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும். பூண்டை நன்கு மசித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை போட்டு அதில் பூண்டு, உப்பு மற்றும் கடைந்து வைத்த கலவையை ஊற்றி கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: