கொத்தமல்லி இலை சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
கத்தரிக்காய் - 6
முருங்கைக்காய் - 1
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 3
சாம்பார் பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - மிகச்சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு & உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி இலை - 1 1/2 கட்டு
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பில் மஞ்சள் தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
தக்காளி, கத்தரிக்காயை சிறியதாகவும் முருங்கைக்காயை ஒரு அங்குல நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு மூன்று நிமிடம் வதக்கி கொத்தமல்லி இலை மற்ற காய்களைப் போட்டு மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
பின் சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி கரைந்ததும் உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் பருப்பு கரைசலை சேர்த்து சாம்பார் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
மீதமுள்ள எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் இரண்டு சின்ன வெங்காயங்களைத் தட்டி சேர்த்து, நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.