குக்கும்பர் தால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளிரிக்காய் - 1

துவரம் பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பில்லை - 4 இலை

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி - கடைசியில் தூவ

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

செய்முறை:

முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

வெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).

வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.

பிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.