கீரை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 கைப்பிடி

பொடியாக அரிந்த கீரை - 2 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 1 1/2 கப்

பாதியாக அரிந்த சிறிய வெங்காயம் - 1 கப்

கீறிய பச்சை மிளகாய் - 3

கட்டி பெருங்காயம் - அரு நெல்லி அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்தமலில்லி - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சம்பழ அளவு

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க்கவும்.

கடுகையும் காயத்தையும் போட்டு அவை பொரிந்து வெடித்ததும் வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

மேலே எண்ணெய் தெளிந்து வந்ததும் புளியைக் கரைத்து ஊற்றவும்.

புளி நீர் சற்று கொதித்ததும் பருப்பை ஊற்றி, போதுமான உப்பு சேர்த்து ஒரு கொதி வரும்போது கீரையைச் சேர்க்கவும்.

கீரை முக்கால்வாசி வெந்து நிறம் மாறும் முன் சாம்பார் பொடியை தூவி, தீயை மிகவும் குறைத்து வைக்கவும். ஒரிரு நிமிடங்களில் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: