கிள்ளூ சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 8
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைத்து மசிக்காமல் 2 தம்ளரில் கரைத்து வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் வெந்த பருப்பு, புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து புளி வாசனை போன பிறகு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
குழம்பு கெட்டியாக இல்லாமல் ரசத்திற்கும் குழம்பிற்கும் இடைப்பட்ட பதத்திலிருக்க வேண்டும்.