காலிஃப்ளவர் சாம்பார் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1/2 கப்

பட்டை - 2

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிச் கொள்ளவும்.

பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து சுடுத்தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு ஒரு பத்து நிமிடம் வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த மசாலாவை போடவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுதை போடவும்.

நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீரை வடித்துவிட்டு காலிஃப்ளவரை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வைத்து, வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: