காலிஃப்ளவர் சாம்பார்
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
சிறு பருப்பு - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - 1 நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித்தழை - 2 கீற்று
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்ல மிளகு - 1/4 தேக்கரண்டி
வத்தல் மிளகாய் - 2
பூண்டு - 1
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
காலிஃப்ளவர் பூக்களை மட்டும் தனியே எடுத்து கொதிக்கும் தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும், தண்டுகளை வெட்டி விட்டு ஒரு பூவையே துண்டுகளாக்கவும்.
பருப்பை கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துவிட்டு அதை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும், தக்காளியை கழுவி விட்டு அதையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
புளியை வெந்நீரில் கரைத்துவைக்கவும், பூண்டினை நசுக்கிவைக்கவும், காய்ந்த மிளகாயை கிள்ளிவைக்கவும்
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வத்தல் மிளகாய், நல்ல மிளகு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அடுத்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து காலிஃப்ளவரை போட்டு கிளறிவிடவும், அடுத்து தக்காளிப்பழத்தினை போட்டு கிண்டவும்.
கடைசியில் சிறு பருப்பையும் தண்ணீரோடு போட்டு கிளறிவிட்டு அதில் மஞ்சள்தூள், சாம்பார்தூள் போட்டு கிளறிவிடவும்.
எல்லாமும் கலந்து விட்டு கரைத்து வைத்து இருக்கும் புளிக்கரைசலை ஊற்றவும் அப்புறம் தேவையான அளவு தண்ணீர் விடவும்.
அடுத்து அதில் பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை போட்டு தேவையான அளவு உப்பும் போட்டு கிளறி குக்கரை மூடி 5 - 6 விசில் விட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பெரும்பாலும் பூரி, சப்பாத்தி, ரொட்டி இவற்றிற்கு நல்ல ஒரு காம்பினேஷன்.