காரட் சாம்பார்





தேவையான பொருட்கள்:
காரட் - 4
தக்காளி - 2
வெங்காயம் - 4
புளி - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 100 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரை டம்ளர் தண்ணீரில் புளியை கெட்டியாக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் பருப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பச்சை மிளகாய் போடவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், காரட், தக்காளி சேர்த்து, புளிக்கரைசலையும் அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
சுமார் 5 நிமிடங்கள் கொதித்த பிறகு தேங்காயுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து அதனை குழம்பில் சேர்கவும்.
எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து விட்டு இறக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டுத் தாளித்து குழம்பில் கொட்டி பரிமாறவும்.