காய் இல்லா இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1 கப்
சின்னவெங்காயம் - 10
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி -1
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
சாம்பார்பொடி - 1 தேக்கரண்டி
புளிகரைசல் - 1/4 கப்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
குக்கரில் பருப்பை வேகவைக்கவும்.
வெங்காயம் உரித்து முழுதாகவைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம் தாளித்து மிளகாய், கறிவேப்பிலை போட்டு, உரித்த வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, புளி கரைசல்,பெருங்காயம் சேர்த்து வதக்கி வெந்த பருப்பை போடவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லிதூவி இறக்கி பரிமாறவும்.