காய்கறி சாம்பார் (2)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
சிறு பருப்பு - 3 மேசைக்கரண்டி
உருளை கிழங்கு - 2 பெரியது
கேரட் - 1 சுமாரானது
தக்காளி - 3 சுமாரானது
கத்தரிக்காய் - 1 சுமாரானது
முட்டை கோஸ் - சிறிது
முருங்கைக்காய் - பாதி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - சிறிது
வத்தல் - 2
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
சோம்பு - சிறிது
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
மஞ்சள் தூள் - தேவையான அளவு
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பு, சிறு பருப்பு இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும்.
கேரட்டை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி வைக்கவும்.
உருளைகிழங்கை தோல் நீக்கி சுமாரான அளவாக நறுக்கி வைக்கவும்.
கத்தரிக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை நான்காக கீறிக்கொள்ளவும்.
முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கிவைக்கவும்.
முட்டை கோஸை அப்படியே போட்டு தான் வேகவைக்கனும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.தாளிப்புக்கு மட்டும் நீளவாக்கில் சிறிது நறுக்கி வைக்கவும்.
பின் எல்லா காய் கறிகளையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.
பின் வத்தல், பூண்டு போட்டு வதக்கி, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் சீரகத்தூள், சோம்புதூள், வத்தல் தூள், மசாலாதூள், 1 1/2 மேசைக்கரண்டி சாம்பார் பொடி போட்டு வதக்கவும்.
தீயை மிதமானதாகவைக்கவும். பின் வேகவைத்த காய்கறிகளையும் தண்ணீருடன் சேர்த்து,பச்சை மிளகாயையும் சேர்த்து கிளறவும். பருப்பை கொஞ்சம் கடைந்தது போல் வைத்து தண்ணீருடனே சேர்க்கவும். தேவையானால் தண்ணீர் சிறிது ஊற்றிக்கொள்ளவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்து கிளறி நன்கு கொதிக்கவிடவும்.
பின் சாம்பார் பொடி மீதம் இருப்பதை சேர்த்து நன்கு கிளறி கொஞ்சம் நேரம் கழித்து கெட்டியானதும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.