காய்கறி சாம்பார் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

முருங்கைக்காய் - 1

கேரட் - 1

கத்தரிக்காய் - 1

பீன்ஸ் - 4

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 5

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணை - 2 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - பாதியளவு

காய்ந்தமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:

பருப்பை குக்கரில் தேவையான தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும்.

காய்களை சிறிதாக நறுக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

தக்காளி நறுக்கிவைக்கவும்.

புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும்.

குழம்புவைக்கும் பாத்திரத்தில் வெந்த பருப்பை போட்டு, நறுக்கிய காய்கள்,சின்ன வெங்காயம், தக்காளி போட்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

காய்கள் பாதி வெந்தவுடன் கரைத்துவைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு பருப்புகளை போட்டு நறுக்கிய வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பெருங்காயம் போட்டு கொதிக்கும் குழம்பில் கொட்டி கொத்தமல்லிதூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: