கல்யாண சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
கத்தரிக்காய் - 1
காரட் - 1
குடை மிளகாய் - 1
உருளை கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தனியா - 3 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
கறி வேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் (எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ) அல்லது தனித் தனியே வறுத்து கரகரப்பாக மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு காய்கறிகளை எல்லாம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
காய் வதங்கிய பிறகு புளி கரைசல், உப்பு மற்றும் சாம்பார் பொடியை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
சாம்பார் நன்கு கொதித்த உடன் வெந்த பருப்பை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு மேற்படி பொடியில் ஒரு தேக்கரண்டி தூவவும்.
சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால் consistancy க்கு சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்து அத்துடன் கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு தாளித்து சூடாக பரிமாறவும்.