கத்திரிக்காய் சாம்பார்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 5

வெங்காயம் - 1

சாம்பார் பொடி - 1/4 கப்

தக்காளி - 1

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/4 கப் + 1/2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சை பழ அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - 1 1/2 ஒன்றரை மேசைக்கரண்டி

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், அரை தேக்கரண்டி துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.

பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டு கலக்கி விடவும்.

அதன் பின்னர் கத்திரிக்காயை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: