கதம்ப சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய் - 2
கத்தரிக்காய் - 2
பீன்ஸ் - 10
காரட் - 2
அவரைக்காய் - 10
பூசனிக்காய் - ஒரு கீற்று
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 3
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பருப்பை போதுமான நீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அனைத்து காய்கறிகளையும் துண்டங்களாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை தோலுரித்துக் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப்பழத்தை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
புளியை நீரில் ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளிப் பழம் சிறிது நேரம் வதக்கி, அத்துடன் வேக வைத்த காய்கறிகள், புளி கரைசல், நீரில் கரைத்த மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, பருப்பு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு கொதிக்கையில் பச்சை மிளகாய்களை கீறிப் போடவும். குழம்பு நன்கு கொதித்ததும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
சாம்பாரை இறக்குவதற்கு முன் வெந்தயம், தனியாவை சிவக்க வறுத்து, கடைசியில் சீரகம் சேர்த்து இலேசாக வறுத்து மூன்றையும் நைசாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை சாம்பாரை இறக்கியதும் அதில் தூவவும். நறுக்கிய கொத்துமல்லித்தழையையும் தூவி கிளறிவிட்டு பரிமாறவும்.