எலும்பு சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
நெஞ்சு எலும்பு - 200 கிராம்
மாங்காய் - 1
பெரிய தக்காளி - 1
முருங்கைக்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கத்திரிக்காய் - 2
வெங்காயம் - 1
மல்லி இலை - சிறிது
மல்லிதூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பட்டை வத்தல் - 2
செய்முறை:
வெங்கயம், தக்காளி, மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.
பருப்பையும் எலும்பையும் வேக வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எலும்பு, வெங்காயம், தக்காளி, மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய், உப்பு, மிளகாய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மல்லிதூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை ஊற்றி கிளறி விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளித்து ஊற்றவும். மல்லி இலை தூவி பரிமாறவும்
குறிப்புகள்:
மாங்காய் சேர்ப்பதினால் புளி தேவையில்லை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.