உடுப்பி சாம்பார்

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேகவைத்து மசித்த துவரம் பருப்பு - 1/2 கப்

முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ - 1/4 கிலோ கிராம்

சின்ன வெங்காயம் (முழுதாக) - 10

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

புளிச்சாறு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

உளுந்து - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

மல்லி - 3 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

வர மிளகாய் - 4

துருவிய தேங்காய் - 1 கப்

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாற வதக்கவும்.

காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்

புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும்.

பின்னர் அரைத்த தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிட்டு

கடுகு, கறிவேபிலை, வரமிளகாய் தாளிக்கவும்.

கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்புகள்: