இட்லி சாம்பார் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 6

துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

வெல்லம் - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

அரிசி மாவு - தேவையான அளவு

மஞ்சள்ப் பொடி - தேவையான அளவு

நல்லெண்ணெய் - ஒரு கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி மஞ்சள் பொடி போட்டு, தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி அதிலேயே போட்டு நன்றாக மசிய வேக விடவும்.

வாணலியில் நல்லெண்ணை விட்டு கடுகு தாளித்து அதிலேயே கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.

பின்னர் உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி, அதில் வெந்த பருப்பு, தக்காளிக் கலவையை நன்றாக மசித்து கொட்டவும்.

பிறகு சாம்பார் மிளகாய் பொடியைப் போடவும். உப்பு, புளி, வெல்லம் மூன்றையும் கரைத்து அதில் விடவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வந்தவுடன் இறக்கவும். குழம்பு சற்று கெட்டியாக வேண்டுமென்றால் சிறிது அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: