இட்லி சாம்பார் (4)
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கிலோ + 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு
வெல்லம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
1/4 கிலோ துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கி பரிமாறவும்.