இட்லி சாம்பார் (3)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 15
புளி - கொட்டைப் பாக்களவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
காய்கள், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பச்சைமிளகாய் கீறிக் கொள்ளவேண்டும்.
குக்கரில் பருப்புகள், நறுக்கின காய்கள், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் 4 கிளாஸ் ஊற்றி மூடி 4 விசில் வைக்க வேண்டும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் மசித்து கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து பருப்புக்கலவையில் கொட்டி, புளி 1/2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குறிப்புகள்:
சுவையான இட்லி சாம்பார் தயார்.