இட்லி சாம்பார் (1)
0
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் - விருப்பபட்டவை
பாசிபருப்பு - ஒரு டம்ளர்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தேவையான அளவு
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - 2 பல் நசுக்கியது
கருவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
குக்கரில் பாசிபருப்புடன் பொடியாக வெட்டிய காய்கறிகள் வெங்காயம், தக்காளி சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பருப்பு,காய் வெந்ததும் கொஞ்சம் தண்ணீர் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சாம்பாரில் கலக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குறிப்புகள்:
இட்லி தோசைக்கு சூடான சுவையான சாம்பார் ரெடி