இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்:
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
வர மிளகாய் - 5
சாம்பார் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி தழை - சிறிதளவு
பெருங்காய பவுடர் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வரமிளகாய் தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், உரித்த சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் பருப்பை கரைத்து சேர்க்கவும். தக்காளியை கையால் நன்றாக கரைத்து ஊற்றவும்.
சாம்பார் சுண்டி வந்ததும் நல்லெண்ணெய், சர்க்கரை, பெருங்காய பவுடர் சேர்க்கவும்.
கடைசியாக கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான இட்லியுடன் பரிமாறவும்.