ஆந்திரா சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 8
வர மிளகாய் - 4
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 1
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கேரட் - 2
கத்திரிக்காய் - 4
உருளை - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பில் தக்காளி, பச்சை மிளகாய், பாதி வெள்ளை பூண்டு, மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் காய்கறிகள், சாம்பார் பொடி, புளி கரைசல் சேர்த்து ஒரு விசிலுக்கு வைக்கவும்.
தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு, பூண்டு, பட்ட மிளகாய் தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் மிளகாய் தூளும் சேர்த்து கிளறவும்.
அதை சாம்பாரில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.