அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள் பொடி - சிறிதளவு

மல்லி - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

பெருங்காயம் - சிறிதளவு

துருவிய தேங்காய் - கால் மூடி

கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வெந்தயம், துவரம் பருப்பு மூன்றையும் கலந்து மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வேக விடவும்.

ஒரு கப் நீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி எடுத்து திட்டமாக உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தேங்காய்த் துருவல் இவற்றை நன்றாக வறுத்து எடுத்து, அரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்து எடுத்த பருப்பை நன்றாக மசித்து அத்துடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்துக் கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பருப்பு புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து புளியின் பச்சைவாசனை அடங்கியதும் அரைத்துள்ள மசாலாவை அதில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.

சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நன்றாக கொதித்து கெட்டியாகும்.

அதன் பிறகு தாளிப்பு கரண்டியில், சிறிது எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: